இன்வெர்ட்டர் பழுது மற்றும் பராமரிப்பு பாதுகாப்பு

weicome to Raja Radios

Inverter Battery Maintenance

இன்வெர்ட்டர் பழுது
உங்கள் இன்வெர்ட்டர் பழுதாகி விட்டதா? முதலில் உங்கள் பேட்டரி சரியாக உள்ளதா என்பதை தெரிந்து கொள்ளவும். பிறகு இன்வெர்ட்டரை சர்வீஸ் செய்யவும். இன்வெர்ட்டர் பேட்டரி இரண்டையும் சர்வீஸ் செய்வது சிறந்த முறையாகும்.
உங்கள் இன்வெர்ட்டரை எங்களிடம் கொடுக்கும் பொழுது என்ன பழுது என்பதை எங்களிடம் தெளிவாக பதிவு செய்யுங்கள்.! நாங்கள் அதை முழுமையாக சோதித்து சரி செய்து தருகிறோம்.

இன்வெர்ட்டரில் ஏற்படும் பழுதுகள்

1) பேட்டரியில் இயங்கவில்லை
2) மின்சாரத்தில் இயங்கவில்லை
3) இரண்டிலும் இயங்கவில்லை
4) பேட்டரியில் இயங்கவில்லை ஆனால் விசில் சத்தம் வருகிறது
5) இரண்டிலும் இயங்கவில்லை விசில் சத்தம் வருகிறது
6) பேட்டரியில் இயங்கும் பொழுது அம்மிங் சவுண்டு வருகிறது
7) மின்சாரத்தில் இயங்கும் பொழுது அம்மிங் சவுண்டு வருகிறது
8) மின்சாரம் இருக்கும் பொழுது இன்வெர்ட்டரில் இயங்குகிறது
9) பேட்டரியில் இயங்கும் பொழுது ஓவர் லோடு இண்டிகேட்டர் இயங்குகிறது
10) பேட்டரி இணைப்பில் இருக்கும் பொழுது லோ பேட்டரி இண்டிகேட்டர் காட்டுகிறது

உங்கள் இன்வெர்ட்டரை பராமரிப்பதற்கான சில குறிப்புகள்

1.உங்கள் இன்வெர்ட்டர் பேட்டரிகளை அரிப்பு மற்றும் துரு இல்லாமல் வைத்திருத்தல்: துருப்பிடிப்பது தற்போதைய ஓட்டத்தைக் குறைக்கிறது, வேகத்தைக் குறைக்கிறது மற்றும் பேட்டரி ஆயுளைக் குறைக்கிறது. பேட்டரியை உலர்ந்த இடத்தில் வைத்து பெட்ரோலியம் ஜெல்லியை தடவவும்.

2.

ஈரப்பதத்தைத் தவிர்க்க குளிர்ந்த இடத்தில் வைத்திருத்தல்: இன்வெர்ட்டர் நன்கு காற்றோட்டமான இடத்தில் நிறுவப்பட வேண்டும். ஒரு குளிர் வெப்பநிலை பேட்டரியின் வெப்பத்தை கட்டுப்படுத்த முடியும்.

3.பேட்டரி நீர் அளவைச் சரிபார்த்தல்: பேட்டரி நீர் அளவைச் சரிபார்ப்பது அவசியம் மற்றும் பரிந்துரைக்கப்பட்ட அளவுகளுக்கு இடையில் பராமரிக்கப்பட வேண்டும்.
4.பேட்டரிகளை வெப்பத்திலிருந்து விலக்கி வைத்தல்: உங்கள் பேட்டரியை நெருப்பு மற்றும் புகையிலிருந்து விலக்கி வைப்பது, திறனை வலுப்படுத்தி, சாத்தியமான வெடிப்பில் இருந்து உங்கள் இன்வெர்ட்டர்ரை பாதுகாக்கவும்.

உங்கள் இன்வெர்ட்டர் பேட்டரியை பாதுகாப்பது உங்கள் கையில்தான் உள்ளது. இது போன்ற தவறுகளை செய்வதற்கு அனுமதிக்காதீர்கள்!! நீங்களும் செய்யாதீர்கள்!!
RAJA
UPS

உங்கள் இன்வெட்டரில் இது போன்று பயன்படுத்தக்கூடாது

இதுவே சிறந்த முறையாகும்

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal